புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரி கப்பல்!

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரியை ஏற்றிய ‘IVS TRADER’ கப்பல் இன்று (04) புத்தளத்தை வந்தடைந்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குத் தேவையான நிலக்கரி கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் நிலக்கரியை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனிடையே, மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, நிலக்கரி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore