ஃபாக்லாந்து தீவுகளுக்கு அருகே எண்ணெய் அகழ்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேய் தெரிவித்துள்ளார்.
ஃபாக்லாந்து தீவுகள் தமது நாட்டுக்குச் சொந்தமானவை என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர், தீவுகளுக்கு அருகிலுள்ள Sea Lion எண்ணெய் வயலில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளையும் எதிர்த்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானியா, ஃபாக்லாந்து தீவுகள் தொடர்பான தனது நிலைப்பாடு மாற்றமற்றது என தெரிவித்துள்ளது.
1982ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் இடம்பெற்றிருந்த நிலையில், ஃபாக்லாந்து தீவுகளின் இறையாண்மை தொடர்பான சர்ச்சை மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.