ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதன் பின்னணியில், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை பாதிக்கும் நோக்கம் இருப்பதாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சென்று அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான ஜனநாயக உரிமை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு இருப்பதைப் போன்று, நாமல் ராஜபக்ஷவுக்கும் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.





