இலஞ்ச அல்லது ஊழல் விசாரணையைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, தனது கைது மற்றும் விளக்கமறியலுக்கான காலப்பகுதி தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் 5ஆம் திகதி அரசாங்கத்தின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு அரசியல் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அனுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, “ஏன் இன்று? ஏன் இப்போது? ஏன் 18ஆம் திகதி வரை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





