மின்வெட்டு தொடர்பான வதந்திகளுக்கு அமைச்சர் விளக்கம்

நாட்டில் மின்சார விநியோகத்தை தடையின்றி தொடர்ந்து வழங்குவதில் தற்போது எந்தவிதமான தடையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாட்டில் மின்வெட்டு ஏற்படவுள்ளதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பரவி வரும் தகவல்களில் உண்மை இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore