திவுல்வெவ – வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையோரமாக பயணித்த உழவு இயந்திரம் ஒன்று குளத்திற்குள் கவிழ்ந்ததில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்றை மீட்க முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்து கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிகொல்லேவ பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





