உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் டின் மீன் வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 20(5) பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிடப்பட்டுள்ள டின் மீன் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு உற்பத்தியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது வர்த்தகர்கள் விற்பனை செய்வது, விற்பனைக்காக முன்வைப்பது அல்லது காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை கட்டுப்பாடு 2026 செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore