மிஹிந்தலை மஹகனதராவ குளக்கரையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி, நான்கு மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான பொதி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (04) மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை அங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





