கெபிதிகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல உஸ்கொல்லேவ பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உஸ்கொல்லேவ பகுதியில் வயல் நிலத்தை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 51 மற்றும் 67 வயதுடைய இருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து கெபிதிகொல்லேவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





