லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைக் குறைப்பை கருத்திற்கொண்டு, தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையை ரூ.5 ஆல் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலைகள் தொடர்ந்து குறையும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.





