இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
செப்டெம்பர் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளதுடன், அங்கு 50,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.84 சதவீதமாகும். தென் மாகாணத்தில் 13,950 பேரும், மத்திய மாகாணத்தில் 8,818 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.





