பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்பே வெளிநாடு சென்ற பிரேமலால் ஜயசேகர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும், மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, பிரேமலால் ஜயசேகர ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்தமை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அவர் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கான விமானப் பயணச்சீட்டையும் முன்பதிவு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore