அரசாங்கம் ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்குவதாக ரணில் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கம் ஜனநாயக அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய அவர், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்திற்கும் மக்களின் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore