22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி உறுதி

உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புலத்சிங்ஹல பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, 22ஆவது திருத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு கிடைத்தவுடன், அதனை விரைவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

நாட்டில் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானங்கள் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டவை எனவும், எடுக்கப்படும் முடிவுகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore