கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 32ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இன்று (07) அதிகாலை பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கார் ஓட்டிச் சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, இரு திசைகளையும் பிரிக்கும் பாதுகாப்பு தடுப்பில் மோதியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. வாகனத்துக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
படம் : Accident1st





