140க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகில் வருகை: போர்ட்ஸ்மவுத்தில் வீதிகளை மறித்து எதிர்ப்பு

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் நகருக்கு ஒரே படகில் சுமார் 140 புலம்பெயர்ந்தோர் வந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்து கால்வாய் வழியாக வந்தவர்களை நகரை விட்டு வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்ததால், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Eastney Landing துறைமுகப் பகுதியைத் தவிர்க்குமாறு Hampshire பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதுடன், அப்பகுதியில் Dispersal Order பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உத்தரவை மீறுவோர் கைது செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

படகில் வந்த புலம்பெயர்ந்தோரை Kent பகுதியில் உள்ள Manston processing centre-க்கு அழைத்துச் செல்வதைத் தடுப்பதே தங்களது நோக்கம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு நிற ஆடைகள் அணிந்து முகமூடி அணிந்திருந்த பல போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்த நிலையில், கலவரத் தடுப்பு கேடயங்களுடன் பொலிஸார் பேருந்துகளைப் பாதுகாத்தனர்.

இந்நிலையில், அமைதியான போராட்டத்திற்கான உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றாலும், அது ஒழுங்கின்மையாக மாறக்கூடாது என பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1ஆம் திகதி வரையிலான ஓராண்டில், சிறிய படகுகள் மூலம் 16,513 பேர் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 43% குறைவாகும்.

இதேவேளை, சமீபத்திய படகு பயணம் பிரான்ஸின் Calais பகுதிக்கு அருகில் இருந்து அல்லாமல், Bay of Seine பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பயணத்தை விட இங்கிலாந்தை அடைவதற்கான கடல் பயணம் நீண்டதாக அமைந்துள்ளது.

சிறிய படகு கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், கடத்தல்காரர்கள் அதிகமானோரை ஏற்றிச் செல்லும் பெரிய “mega-dinghy” படகுகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் BBC தெரிவித்துள்ளது.

(Source : BBC)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore