செப்டம்பர் 14 முதல் 19 வரை 62 சுகாதாரப் பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு திட்டம்

நாட்டில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 14 முதல் 19ஆம் திகதி வரை ஐந்து நாள் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள 62 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் நிலையில், டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் அதிகரிப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை 96,482 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 73 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 50,395 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 20,527 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 19,074 பேரும் பதிவாகியுள்ளனர்.

தென் மாகாணத்தில் 13,740 பேரும், மத்திய மாகாணத்தில் 8,093 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,590 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,964 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 21,533 பேரும் ஜனவரி மாதத்தில் 7,866 பேரும் பதிவாகியிருந்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore