விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பிரிவைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அவரைச் சந்திப்பதற்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் மூன்று பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





