மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் அவர் இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, அவருக்கு எதிராக வேறு இரண்டு வழக்குகளில் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.





