2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மேன்முறையீடு ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, செப்டம்பர் 21ஆம் திகதி வரை மேன்முறையீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் முழுமையாக ஒன்லைன் முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி onlineexams.gov.lk இணையத்தளத்தின் SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து மேன்முறையீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore