38 வருட சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றார் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹண, 38 வருட பொலிஸ் சேவையை நிறைவு செய்து இன்று (08) ஓய்வு பெற்றுள்ளார்.

அவரது ஓய்வை முன்னிட்டு குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் பொலிஸ் மரியாதை நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை பொலிஸ் சேவையில் குறைந்த வயதில் பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியை அடைந்த அதிகாரிகளில் ஒருவராக அறியப்படும் அஜித் ரோஹண, சட்டத்துறையிலும் கல்வியிலும் சிறப்புத் தகுதிகளைப் பெற்றுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட அவர், பொதுமக்களுடன் தெளிவான தொடர்பாடலை மேற்கொண்டதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தார்.

அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும், தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிகளையும் வகித்துள்ளார்.

சட்டத்துறையில் கல்வி கற்றுள்ள அவர், உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளதுடன், 2020ஆம் ஆண்டு கௌரவ கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார்.

TREND செய்திகள்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore