அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் நேற்று (07) மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore