ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை இன்று (08) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





