சம்மாந்துறை தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 1 ஆண்டு 3 மாதங்களை நிறைவு செய்துள்ளது.
சவால்கள் நிறைந்த காலகட்டத்தில், 2025 ஜூன் 6ஆம் திகதி (அரபா நோன்பு தினம்) ஆரம்பிக்கப்பட்ட இந்த ICU, சம்மாந்துறை மக்களுக்கான அவசர மற்றும் தீவிர சிகிச்சை சேவையில் இன்று முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.


இந்நிகழ்வு ICU குழுவினரால், வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் Dr. D. Prabashankar அவர்களின் வழிகாட்டுதலும் அனுசரணையும் கீழ் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும், ICU-வின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பங்களித்த பலரும் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் Dr. Safeek VP அவர்களும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது வெறுமனே 1 ஆண்டு 3 மாதங்களின் நிறைவு அல்ல…
சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, அவசர நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை வழங்கி வரும் ஒரு முக்கியமான சுகாதார சேவையின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய அத்தியாயம்.
சம்மாந்துறை மக்களின் சுகாதாரத் தேவைகளை மேலும் சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில், சம்மாந்துறை தள வைத்தியசாலையின் ICU இன்னும் பல உயரங்களை நோக்கி தனது சேவையைத் தொடரட்டும்.





