செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக 119 அவசர சேவையில் புதிய WhatsApp வீடியோ வசதி!

செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினர் 119 அவசர சேவைக்கு முறைப்பாடுகளை தெரிவிக்க புதிய WhatsApp வீடியோ சேவையை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

இந்த புதிய சேவை செப்டம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

நிரந்தர குறுந்தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் தங்களது தொலைபேசியில் 011-2809980 என்ற இலக்கத்தை சேமித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த இலக்கத்திற்கு WhatsApp Audio Call ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அழைப்பு தானாக துண்டிக்கப்பட்ட பின்னர், பயனரின் தொலைபேசிக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும்.

அந்த இணைப்பைத் திறந்து “Join Browser” → “Join Meeting” என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பொலிஸாருடன் வீடியோ அழைப்பில் இணைந்து தங்களது முறைப்பாட்டை தெரிவிக்க முடியும்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற 160ஆவது பொலிஸ் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் பாதுகாப்பையும் அவசர சேவைகளுக்கான அணுகலையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore