16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான அபராதம் ரூ.100,000 ஆக அதிகரிப்பு

கொழும்பு, செப். 08: பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் தொடர்பான திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க சட்டத்தை திருத்தும் சட்டமூலம், கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று அதற்கு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

இதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்ந்து முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப அபராதங்களை புதுப்பிப்பதே இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.

இதனடிப்படையில், 2026ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore