ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்யவுள்ள அனுராதபுர பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
UNP தலைவர் வஜிர அபேவர்தன, SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
SLPP தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டமை, அனுராதபுர பேரணியை பாதிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் வஜிர அபேவர்தன தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடன் நடைபெறவுள்ள அனுராதபுர பேரணி வெற்றியடைய வேண்டும் என UNP தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.





