செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களில் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் இலங்கையில் வீதி விபத்துகளில் சுமார் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துகளில் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள், அதிகளவில் பாதிக்கப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்புற இருக்கைகளில் சீட் பெல்ட் இல்லாத பழைய வாகனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசமும் முடிவுக்கு வரவுள்ளது.

இதன்படி அலுவலகப் போக்குவரத்து வாகனங்கள், பாடசாலை வேன்கள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தேவையான சீட் பெல்ட் வசதிகளுடன் இருக்க வேண்டும்.

செப்டம்பர் 19ஆம் திகதிக்குப் பின்னர் விதிமுறைகளைப் பின்பற்றாத வாகனங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க முடியும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இந்த விதிமுறை இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore