மலேசியாவில் ‘Flying Doctor’ ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் ‘Flying Doctor’ ஹெலிகொப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ‘Flying Doctor’ மருத்துவ சேவையில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை Long Lellang பகுதியில் உள்ள குறுகிய ஓடுபாதை விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹெலிகொப்டரில் விமானி, ஒரு மருத்துவ அதிகாரி, உதவி மருத்துவ அதிகாரி மற்றும் இரண்டு தாதியர்கள் உள்ளிட்ட 5 பேர் பயணித்திருந்ததாக மலேசிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான பகுதி மிகவும் தொலைதூரமான பிரதேசமாக இருந்ததுடன், அப்பகுதியில் நிலவிய புகைமூட்டம் மற்றும் மோசமான காற்றுத் தரம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் மலேசிய விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore