ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக அல்கோரிதம் கட்டுப்பாட்டுக்கு பயனர்களுக்கு அதிகாரம்

ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சட்டத்தின் மூலம், சமூக ஊடகங்களில் அல்கோரிதம் பரிந்துரைக்கும் பதிவுகளைப் பார்க்க வேண்டுமா அல்லது தாம் பின்தொடரும் கணக்குகளின் பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டுமா என்பதை பயனர்களே தெரிவுசெய்யும் வாய்ப்பு ஏற்படவுள்ளது.

📱 TikTok, Instagram, Facebook போன்ற தளங்கள், பயனர்களுக்கு push notification மூலம் இந்தத் தெரிவை வழங்க வேண்டியிருக்கும்.

அதன்படி பயனர்கள்:

🔹 Algorithm Feed – தங்களுக்கு பரிந்துரைக்கப்படும் பதிவுகள் மற்றும் காணொளிகள்
🔹 Following-only Feed – தாம் பின்தொடரும் கணக்குகளின் பதிவுகள் மட்டும்

என இரு விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய முடியும்.

இந்த முன்மொழிவு, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே குறைக்க வேண்டிய “Digital Duty of Care” சட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 100 மில்லியன் ஆஸ்திரேலிய டொலருக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்படலாம்.

குழந்தைகளைப் பொறுத்தவரை இணையத் துன்புறுத்தல், ஆபாச உள்ளடக்கம், பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் உணவுக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

“தொழில்நுட்பம் நம்மை வடிவமைக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் வடிவமைக்க நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது” என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore