மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை ஒழித்த நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகளாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு சிறப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.
திமோர்-லெஸ்தேயின் டிலி நகரில் நடைபெறும் WHO தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது அமர்வில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களிடம் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
🔹 இலங்கை 2016ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக WHO-வால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
🔹 அதன்பின்னர் 10 ஆண்டுகளாக மலேரியா மீண்டும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்ட நிலை பாராட்டப்பட்டுள்ளது.
🔹 தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மாலத்தீவுக்கு அடுத்ததாக மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடு இலங்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.
🔹 தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி நோய் ஒழிப்பு நிலையும் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளது.
வலுவான ஆரம்ப சுகாதார அமைப்பு, தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் திறமையான நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இந்த சாதனைகளை நிலைநிறுத்த உதவியதாக WHO தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரம் இது!





