29 வயது இளைஞர் கொலை – இருவர் கைது

தலத்துஓயா, பவ்லான பகுதியில் காணாமல் போன 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் செப்டம்பர் 4ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக செப்டம்பர் 7ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பவ்லான பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து தீயில் எரிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 41 வயதுடைய ஒரே பகுதியைச் சேர்ந்த இருவர் தலத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் இளைஞர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலத்துஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore