இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது கைச்சாத்திடப்பட்ட இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

📌 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore