சர்வதேச சந்தையின் முக்கிய எண்ணெய் விலை அளவுகோலான Brent கச்சா எண்ணெய், ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உலகளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரிப்பதுடன், பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.





