அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்காக அதிகாரிகள் நீர் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தங்கல மற்றும் கல் ஓயா பள்ளத்தாக்கு வடகிழக்கு (அம்பாறை சரணாலயம்) பகுதிகளில் வறட்சியால் காய்ந்துள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது.
நீண்டகாலமாக நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக இயற்கையான பல நீராதாரங்கள் வறண்டுள்ளதால், வனவிலங்குகள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.
இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்கள் இணைந்து இந்த நீர் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபமா மங்கள விக்கிரமராச்சி தேவையான ஆதரவுகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று லாகுகல தேசிய பூங்கா உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களிலும் வனவிலங்குகளுக்கான நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன





