பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 87 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவான் மாகாணத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொரான் பகுதிக்கு அருகில், கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீற்றர் தொலைவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
MV June Aster என்ற பயணிகள் கப்பலிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது கப்பலில் மொத்தம் 134 பேர் பயணித்ததாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
இதுவரை 42 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 87 பேரை காணவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கப்பலில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





