புதிய iPhone 18 Pro மற்றும் Pro Max அறிமுகம் – கேமராவில் முக்கிய மாற்றம்!

Apple நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய Pro மொடல்கள் A20 Pro chip மூலம் இயங்குவதுடன், 2 நானோமீற்றர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் புதிய தலைமுறை vapor chamber தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் GPU செயல்திறன் முந்தைய A19 Pro சிப்புடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக Apple தெரிவித்துள்ளது.

📸 Variable Aperture கேமரா

iPhone 18 Pro தொடரின் முக்கிய புதிய அம்சமாக 48MP Fusion Main Camera அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

iPhone வரலாற்றில் முதல் முறையாக இதில் Variable Aperture வசதி வழங்கப்பட்டுள்ளது. 6-blade aperture அமைப்பு, வெளிச்சத்தின் அளவு மற்றும் புகைப்படத்தின் depth of field ஆகியவற்றுக்கு ஏற்ப தானாக மாற்றங்களைச் செய்யும். பயனர்கள் தேவைக்கேற்ப aperture-ஐ கைமுறையாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

மேலும், புகைப்படங்கள் உண்மையானவையா அல்லது மாற்றம் செய்யப்பட்டவையா என்பதை சரிபார்க்க உதவும் “Apple Reference Image” என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறிப்பாக புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செய்திப் புகைப்படக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என Apple தெரிவித்துள்ளது.

🤖 புதிய Siri AI

iPhone 18 Pro மொடல்கள் iOS 27 உடன் வெளியாகின்றன. புதிய Siri AI, பயனரின் Messages, Emails, Photos உள்ளிட்ட தகவல்களில் உள்ள தனிப்பட்ட சூழலைப் புரிந்துகொண்டு உதவக்கூடியதாக இருக்கும்.

மேலும், திரையில் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயல்களை மேற்கொள்ளும் திறனும் Siri-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த AI வசதி ஆரம்பத்தில் Beta பதிப்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

🔋 மேம்படுத்தப்பட்ட Battery

eSIM-only பதிப்புகளில் iPhone 18 Pro ஆனது 36 மணி நேரம் வரையிலும், Pro Max 45 மணி நேரம் வரையிலும் வீடியோ இயக்கத்தை வழங்கும் என Apple தெரிவித்துள்ளது.

மேலும், wired charging மூலம் சுமார் 15 நிமிடங்களில் 50% வரை battery charge செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய Dynamic Island அளவில் சிறியதாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் 3 Live Activities வரை காண்பிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

💰 விலை மற்றும் விற்பனை

iPhone 18 Pro-வின் அமெரிக்க ஆரம்ப விலை US$1,199 ஆகவும், iPhone 18 Pro Max-ன் ஆரம்ப விலை US$1,299 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை 256GB முதல் 2TB வரையிலான storage options-ல் கிடைக்கும். Black, Silver, Glacier மற்றும் புதிய Burgundy நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

முன்பதிவு செப்டெம்பர் 12ஆம் திகதி 65க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆரம்பமாகவுள்ளது. விற்பனை செப்டெம்பர் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மேலும் 20 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டெம்பர் 25ஆம் திகதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore