80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மருதானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின்படி, 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், Telegraphic Transfer (T/T) முறைமையை பயன்படுத்தி சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





