முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.
மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, இன்று காலை 9.30 மணிக்கு FCID-யில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான கொள்வனவு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, முன்னாள் விமானப்படை தளபதியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





