72 வயதில் 20 வயது இளம்பெண்ணை கரம்பிடித்த மலேசிய கால்பந்து ஜாம்பவான்!

மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டத்தோக் அப்தா அலிப், தனது 72ஆவது வயதில் 20 வயது இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருமணம் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி கோலா திராங்கானுவில், இரு குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் எளிமையான முறையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

1970களின் இறுதி மற்றும் 1980களின் ஆரம்ப காலப்பகுதியில் மலேசிய தேசிய அணியின் முக்கிய வீரராக விளங்கிய அப்தா அலிப், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மலேசிய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் இருவரும் தேனிலவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், திருமணம் தொடர்பான செய்தியை அப்தா அலிப்பின் சகோதரரும் முன்னாள் தேசிய கால்பந்து வீரருமான டத்தோக் யூனுஸ் அலிப் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருவருக்கும் இடையில் 52 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து மலேசிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இந்த திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இரு குடும்பங்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவதாகவும் யூனுஸ் அலிப் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore