இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளன.
T20I தொடர்
- ஒக்டோபர் 9 – 1ஆவது T20I – ராவல்பிண்டி
- ஒக்டோபர் 11 – 2ஆவது T20I – ராவல்பிண்டி
- ஒக்டோபர் 13 – 3ஆவது T20I – ராவல்பிண்டி
இதனைத் தொடர்ந்து இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் (ODI) தொடர் நடைபெறவுள்ளது.

ODI முத்தரப்பு தொடர்
இந்தத் தொடரின் போட்டிகள் ஒக்டோபர் 18 முதல் 31ஆம் திகதி வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறவுள்ளன.
இறுதிப் போட்டி ஒக்டோபர் 31ஆம் திகதி லாகூரில் நடைபெறும்.
டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானுடன் மோதல்
ODI முத்தரப்பு தொடர் நிறைவடைந்த பின்னர், இலங்கை அணி பாகிஸ்தானுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
முதல் டெஸ்ட் நவம்பர் 9 முதல் 13ஆம் திகதி வரை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 17 முதல் 21ஆம் திகதி வரை லாகூரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025–27 சுற்றின் ஒரு பகுதியாகும்.
இதன்மூலம் T20I, ODI மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானில் விளையாடும் முழுமையான சுற்றுப்பயணமாக இலங்கை அணியின் இந்த பயணம் அமையவுள்ளது.





