உலகின் மிக உயரமான உயிருடன் வாழும் குதிரையாக ‘ஹியூகோ’ (Hugo) என்ற Shire இன குதிரை சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தின் Northamptonshire, Towcester பகுதியில் வளர்க்கப்படும் 4 வயதான ஹியூகோ, தோள்பட்டை உயரத்தில் 199 சென்டிமீட்டர் (சுமார் 6.5 அடி) உயரத்தை எட்டியுள்ளது. இதனை கால்நடை மருத்துவர் பரிசோதித்து அதிகாரப்பூர்வமாக அளவிட்டுள்ளதாக Guinness World Records தெரிவித்துள்ளது.

ஹியூகோ இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என அதன் உரிமையாளர் Brett Masters தெரிவித்துள்ளார். பொதுவாக இந்த இனக் குதிரைகள் சுமார் 8 முதல் 8½ வயது வரை வளரக்கூடியவை என்பதால், ஹியூகோ எதிர்காலத்தில் மேலும் உயரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக உயரம் காரணமாக ஹியூகோவின் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. Chiropractor, கால்நடை மருத்துவர், பல் மருத்துவர் மற்றும் massage நிபுணர்களின் தொடர்ச்சியான பராமரிப்புடன், சிறப்பு உணவு முறையும் supplements-களும் வழங்கப்படுகின்றன. அதன் பற்களும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகின்றன.

ஹியூகோ வெளியே அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டமான தோற்றத்தை பார்த்து மக்கள் ஆச்சரியமடைந்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்வதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இதுவரை பதிவாகியுள்ள மிக உயரமான குதிரை என்ற சாதனை 1850ஆம் ஆண்டு வாழ்ந்த Shire இனத்தைச் சேர்ந்த Sampson (பின்னர் Mammoth என அழைக்கப்பட்டது) என்பதற்குரியது. அதன் உயரம் சுமார் 2.19 மீட்டர் (7 அடி 2.5 அங்குலம்) என பதிவாகியுள்ளது.
தற்போது ஹியூகோ விவசாய உபகரணங்களை இழுப்பது, வண்டிகளை இயக்குவது உள்ளிட்ட Shire குதிரைகளின் பாரம்பரிய பணிகளைச் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதுடன், மனிதர்கள் சவாரி செய்வதற்கும் பயிற்சி பெற்று வருகிறது.





