தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றை இலக்குவைத்து இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரண்டு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். 55 வயதுடைய அவர்களது தந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, செப்டம்பர் 9 இரவு தெஹிவளை–களுபோவில பகுதியில் மற்றொரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.





