நிந்தவூரில் அதிரடி வேட்டை! 15 கிராமுக்கும் அதிகமான ஐஸுடன் 49 வயதுடையவர் கைது

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் போதைப்பொருள் மீட்பு

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (10) வியாழக்கிழமை காலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திருக்கோயில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore