99ஆவது அகாடமி விருதுகள் (Oscars) – 2027 போட்டியில் சர்வதேச திரைப்படப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள திரைப்படத்தைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹாதிவுல்வெவ, இன்று (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.
ஆஸ்கர் ஏற்பாட்டாளர்களிடம் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்தத் தெரிவு நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக திரைப்படத் துறையைச் சேர்ந்த 9 நிபுணர்களைக் கொண்ட விசேட தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
📌 விண்ணப்ப காலம்: 24 ஆகஸ்ட் – 21 செப்டெம்பர் 2026
📌 திரைப்படத் தெரிவு: National Oscar Selection Committee of Sri Lanka (NOSCSL)
📌 இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் அறிவிப்பு: 28 செப்டெம்பர் 2026
📌 விண்ணப்ப மின்னஞ்சல்: office.noscsl@gmail.com
தகுதியான திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், தேசிய ஆஸ்கர் தெரிவுக்குழு அவற்றை பரிசீலித்து வாக்களிப்பின் மூலம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்படத்தைத் தெரிவு செய்யவுள்ளது.
2027 ஆஸ்கர் விருதுகளில் இலங்கையின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக எந்த திரைப்படம் தெரிவாகும் என்பது செப்டெம்பர் 28ஆம் திகதி தெரியவரும்.





