24 வயது இளைஞனின் வயிற்றுக்குள் கருப்பை

இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சிகிச்சை பெறுவதற்காக 24 வயது இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.

வெளிப்புறமாக அவருக்கு ஆணுக்குரிய உடல் அமைப்புகள் இயல்பாகவே இருந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஸ்கேன் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதியில் பெண்களுக்கு காணப்படும் கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், விதைப்பையில் இருக்க வேண்டிய இரண்டு விரைகளும் விதைப்பையில் இல்லாமல் வயிற்றுப் பகுதியிலேயே இருந்ததும் மருத்துவர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த அரிய மருத்துவ நிலை, மருத்துவ ரீதியாக ‘பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்’ (Persistent Müllerian Duct Syndrome) என அழைக்கப்படுவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வயிற்றுக்குள் இருக்கும் விரைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கக்கூடும் என்பதால், உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞருக்கு குறைந்த அளவு காயம் ஏற்படும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றுப் பகுதியில் இருந்த கருப்பை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் தொடர்பில் மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மருத்துவ ரீதியாக மிகவும் அரிய ஒன்றாக கருதப்படுவதுடன், குழந்தையின்மை அல்லது இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore