முன்னாள் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான எம்.எஸ். அப்துல் மஜீத் மனித உரிமைகள் அமைப்பு லங்காவின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பு

மக்கள் மத்தியில் மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்து, மக்களோடு மக்களாக இணைந்து செயற்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதம பொலிஸ் பரிசோதகர் (Rtd. Chief Inspector of Police) சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான எம்.எஸ். அப்துல் மஜீத் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மனித உரிமைகள் அமைப்பு லங்கா (Human Rights Organization Lanka) அமைப்பின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, கடந்த (11) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூகத்தின் பல்வேறு தரப்பினருடன் இணைந்து மனிதாபிமான சேவைகளை முன்னெடுப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி எம்.எஸ். அப்துல் மஜீத் அவர்களுக்கு கௌரவிப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் International Human Rights Organization Sri Lanka அமைப்பின் தலைவர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் அல்-ஹாஜ். டாக்டர் எம்.என்.எம். அஸீம் JP தலைமை தாங்கினார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் கௌரவ ALM. அதாஉல்லாஹ் கலந்து கொண்டார்.

மேலும், சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் Y. ரஷீத் மற்றும் அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. நுஹான் நந்தநாயக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் மனித உரிமைகள், சமூக சேவை மற்றும் மனிதாபிமானப் பணிகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore