கம்பஹா, உடுகம்பொல – அஸ்கிரிய பகுதியில் நிறுத்துமாறு பொலிஸார் விடுத்த உத்தரவை வேன் சாரதி பின்பற்றத் தவறியதாக கூறப்படும் நிலையில், பொலிஸார் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் உடுகம்பொல, மல்வத்த வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் வேன் சாரதி காயமடைந்துள்ளதுடன், பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





