இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, சர்வதேச தடகள அரங்கில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிய நிலையில் இன்று (15) அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உள்ளிட்ட, அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளும் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற Ultimate Championship மற்றும் Diamond League ஆகிய இரு முக்கியமான சம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5.10 மணியளவில் துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் சர்வதேச போட்டிகளில் சாதனைக்காக பயன்படுத்திய முக்கியமான ஈட்டிகளே சேதமடைந்துள்ளமை தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





