நுவரெலியா நகரையே உலா வரும் மட்டக்குதிரைகள் – வாகன ஓட்டிகள் விபத்து அச்சம்

நுவரெலியா
நகர்ப்புறங்களில் வளர்க்கும் மட்டக்குதிரைகள் மேய்ச்சலுக்காக அப்படியே அவிழ்த்து விடப்படுகின்றன அவை பிரதான நகரை சுற்றி போதிய உணவு கிடைக்குமா என தேடலை துவங்கி வீதியோரம் உள்ள புற்கள், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் உட்கொள்கின்றன பின்னர் தாராளமாக பிரதான வீதிகளில் படுத்து தூங்கி விடுகின்றன இதனால், வாகன ஓட்டிகளின் பாடு திண்டாட்டம் தான். வீதிகளையே பட்டியாக மாற்றிக்கொள்ளும் மட்டக்குதிரைகள் வீதியை கூட்டமாக கடப்பது போன்ற செயல்களால் வாகன ஓட்டிகள் திண்டாடி வருகின்றனர்.

மட்டக்குதிரைகளை
வளர்ப்போர் தங்களது இடங்களில், நகராட்சி அனுமதி பெற்று பட்டி அமைத்து வளர்க்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் மட்டக்குதிரைகள் சுற்றித் திரிந்தால், நகராட்சி மூலம் பிடித்து பொது ஏலத்தில் விடப்படும்,’ என நகராட்சி மூலம் கடந்தாண்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது ஆனால் நகரில் சுற்றும் மட்டக்குதிரைகளை கட்டுப்படுத்த முடியாத சூழலே உள்ளது இதன் விளைவு வாகன ஓட்டிகள் தினமும் அவதிப் படுவதுதான் தொடர்கதையாகியுள்ளது வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவது வழக்கமாகியுள்ளது. மேலும், வாகனங்களில் செல்பவர்களை துரத்துவது நடந்து செல்பவர்களை துரத்தி கீழே விழச்செய்து பதம் பார்ப்பது போன்ற பல்வேறு செயல்களும் நடந்து வருகின்றன.

நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. , அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன.

மட்டக்குதிரைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால் அதன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நகரில் மற்றும் பிரதான வீதியில் திரியும் மட்டக்குதிரைகளை
பிடித்து அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்டுப்பாடின்றி உலா வரும் மட்டக்குதிரைகள் காரணமாக தற்போதைய காலக்கட்டத்தில், குறுகிய வீதியில் வாகனங்கள் செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், ஆங்காங்கே மட்டக்குதிரைகள் மேய்வதும், அவைகள் வீதியில் தங்களுக்குள் சண்டையிட்டு வாகன ஓட்டிகளின் மீது மோதி கீழே விழச்செய்கின்றன.

நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர். மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில் அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது.

எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும். பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.

https://we.tl/t-dfaexR5O37h3DbGmVideo’s link

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore